நவம்பர் மாதத்தில் மழையின் அளவு குறைந்தது.

நவம்பர் மாதத்தில் மழையின் அளவு குறைந்தது. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவான புயல் காரணமாக பருவமழை பாதிக்கப்பட்டது. அதன்பிறகு ஓரளவு மழை பெய்யத் தொடங்கியது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் 445.7 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்யும். இம்முறை 453.5 மில்லி மீட்டர் என 2 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது. அதேசமயம் மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் மழை மிகவும் குறைவாக பெய்துள்ளது.